எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் தெலங்கானா அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
மறுசீரமைப்புப் பணிக்காக புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அவற்றின் மீது ஏறி நின்ற மாணவர்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றபோது மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தில் முதலீட்டை ஈர்க்க, அந்த நிலத்தில் ஐ.டி.பூங்கா அமைக்க உள்ளதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இதனிடையே மாணவர்கள் தாக்கப்பட்டதாக பிஆர்எஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மாணவர்கள்- போலீசார் மோதிக் கொள்ளும், அவர்களை போலீஸ் இழுத்துச் செல்லும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.