​​அமெரிக்‍க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் விசா குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க பல்கலைக்‍கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா, நடப்பாண்டில் 38 சதவீதம் குறைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்‍கழகங்களில் படிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு, வழங்கப்படும் எப் - 1 என்ற விசாவை இந்தியா மற்றும் சீன மாணவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 64 ஆயிரத்து 8 விசாக்கள் மட்டும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்திய மாணவர்களுக்‍கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 495 விசாக்‍கள் வழங்கப்பட்டன. அடுத்த மாதம் அமெரிக்‍க அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் இந்திய மாணவர்களுக்‍கான விசாக்‍கள் மேலும் குறையும் என கருதப்படுகிறது. 

Night
Day