'ஆல் இந்தியா பர்மிட்' வைத்திருந்தும் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகில இந்திய சுற்றுலா அனுமதி வைத்துள்ள வாகனங்களும் சில மாநில அரசுகள் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களது வாகனங்களுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி எனும் 'ஆல் இந்தியா பர்மிட்' வைத்திருந்தால் உரிய பர்மிட் இன்றி மாநிலத்திற்கு மாநிலம் செல்ல முடியும். இந்நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் பர்மிட் இருந்தும் கட்டணங்களை வசூலிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களை நாடி நிவாரணம் கேட்டுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Night
Day