'ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்' : மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என அரசுத் துறைகள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசுப் பணியாளா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை உரிய நேரத்தில் நிறைவு செய்து முடிவு எடுப்பதில் அதிக காலதாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது நீதிக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான நோக்கத்தையும் வீழ்த்துவதாக சுட்டிக் காட்டியுள்ளது. எனவே ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை உரிய நேரத்தில் முடித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Night
Day