'சீதா தேவிக்கும் விரைவில் பிரம்மாண்டமான கோவில்' - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமர் கோவிலைத் தொடர்ந்து சீதா தேவிக்கும் பிரமாண்டமான கோயில் விரைவில் கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். 


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற சஷ்வத் மிதிலா மஹோத்சவ் விழாவில் பங்கேற்று பேசிய அவர், மக்களவைத் தேர்தலின் போது பீகார் சென்றபோது, ​​ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அடுத்த கட்டமாக சீதா தேவிக்கு ஒரு அற்புதமான கோயில் கட்டப்படும் என தான் கூறியதாக குறிப்பிட்டார். அதன்படி, இந்தக் கோயில் பெண்களின் வலிமை மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கை மதிப்புகளின் உலகளாவிய செய்தியாக நிற்கும் என அமித் ஷா கூறினார். குஜராத்தில் குடியேறிய பீஹாரி மற்றும் மிதிலாஞ்சல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார். 

Night
Day