'தீபாவளி, சத் பூஜையின் போது கலவரத்தை ஏற்படுத்த சிலர் திட்டம்' - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரவிருக்கும் தீபாவளி, காளி பூஜை மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது கலவரத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலத்தில் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவை உளவுத்துறையை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறினார். வகுப்புவாத கலவரங்களைத் தூண்டி வன்முறையை உருவாக்க சதி நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பண்டிகைகளின்போது  அமைதியின்மை விளைவிப்போர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், அதனை ஊடகங்கள் பரபரப்பாக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

Night
Day