'மதரஸா இடிக்கப்பட்ட இடத்தில் காவல் நிலையம் கட்டப்படும்' : உத்தரகாண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட்டின் ஹல்த்வானி நகரில் நிகழ்ந்த வன்முறைக்கு காரணமான மதரஸா இடிக்கப்பட்ட இடத்தில் காவல் நிலையம் கட்டப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். அரசு நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த 8-ம் தேதி மதரஸா இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வீடுகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையில் 6 பேர் உயிரிழக்க 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். தற்போது ஹல்த்வானி நகர் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.  இந்தநிலையில்தான் மதரஸா இடிக்கப்பட்ட இடத்தில் காவல்நிலையம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Night
Day