'வரி செலுத்துவோர் செய்யும் சேவையை மதிக்கவே வரி நிவாரணம்' - நிர்மலா சீதாராமன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2025 பட்ஜெட்டில் வழங்கப்பட்ட வரி நிவாரணம், பிரதமர் நரேந்திர மோடியின் தேசக் கட்டுமானத்திற்காக வரி செலுத்துவோர் செய்யும் சேவையை மதிக்கும் நடவடிக்கை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே மற்றும் பிசினஸ் டுடேவின் பட்ஜெட் வட்ட மேசை நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், புதிய வருமான வரி மசோதா செயல்பாட்டில் உள்ளது என்றார். ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பு எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டார். அதனால்தான் புதிய வருமான வரிச் சட்டத்தை  கொண்டு வருவதாகவும் இது 1961 முதல் இருந்து வரும் பழைய சட்டத்தை மாற்றும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். 

Night
Day