10 வேட்பாளர்கள் அடங்கிய புதிய பட்டியல் - காங். வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பத்து வேட்பாளர்கள் அடங்கிய புதிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த கன்னையா குமார் வடகிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். ஜலந்தருக்கு பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, சாந்தினி சவுக் தொகுதிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால், வடமேற்கு டெல்லிக்கு உதித் ராஜ், அமிர்தசரஸில் குர்ஜித் சிங் அவுஜ்லா, ஃபதேகர் சாஹிப்பில் அமர் சிங், பதிண்டாவில் ஜீத் மொஹிந்தர் சிங் சித்து, சங்ரூரில் சுக்பால் சிங் கைரா, பாட்டியாலாவுக்கு தரம்வீர் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் தொகுதிக்கு உஜ்வல் ரேவதி ராமன் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day