100% வாக்குப்பதிவு - உத்திரப்பிரதேசத்தில் புதிய முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வீட்டு வசதி குடியிருப்பு சங்கங்களுக்குள் வாக்குப்பதிவு மையங்களை அமைக்க தேர்தல் ஆணையம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.  

நடவடிக்கைய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தமுறை வாக்குப்பதிவு சதவீதத்தில் உத்தரப் பிரதேசம் முதல் இடம் பிடிக்கும் வகையில், வாக்களர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தடையாக உள்ள அனைத்து தடைகள் நீக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வாக்குப்பதிவு குறைவாக இருந்த நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்கும் புதிய முயற்சியை  மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Night
Day