11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க் கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. அதானி மற்றும் மணிப்பூர் பிரச்னை, சம்பல் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தெடார் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஏதும் நடக்காமல், இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படு வந்தன.

இந்நிலையில், மக்களவை இன்று காலை கூடியதும், சமீப நாட்களாக நடந்து வரும் இடையூறுகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். இருப்பினும், கேள்வி நேரம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதானி விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  

இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான தொடர்பு குறித்த பிரச்னையை எழுப்பி ஆளுங் கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து மாநிலங்களவையும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

Night
Day