எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவைத் தோ்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8.8 கோடி ஆண் வாக்காளர்களும், 7.8 கோடி பெண் வாக்காளர்களும், 5,929 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 67 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில், இதில் 4 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பெண்களால் கையாளப்படும் வகையில் பிங்க் வாக்கசாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 640 வாக்கு சாவடிகள் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்ககூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஆயிரத்து 202 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அதில், ஆயிரத்து 98 ஆண் வேட்பாளர்களும், 102 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம் பேதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் 3ம் கட்ட வாக்குப்பதின் போது தேர்தல் நடைபெற உள்ளது.