இந்தியா
மகாராஷ்டிரா - மகாயுதி கூட்டணி நல்லாட்சிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து...
மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்ச?...
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 14 நாட்களில், சி-விஜில் செயலி மூலம் 79 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை 14 நாட்களில் 79 ஆயிரம் புகார்கள் சி-விஜில் செயலி கிடைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணம், பரிசுப் பொருட்கள், மதுபான வினியோகம் தொடர்பாக ஆயிரத்து 400 புகார்களும், சட்டவிரோத பதுக்கல் தொடர்பாக 58 ஆயிரத்து 500 புகார்களும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதவிர மிரட்டல் தொடர்பாக 535 புகார்களும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்ததாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களும் கிடைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்ச?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...