எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஓசூர் அருகே 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கட்டாய திருமணம் செய்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலுக்கட்டாயமாக சிறுமையை தூக்கி செல்லும் வீடியோ வெளியானதை அடுத்து, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், மாதேஷ் என்பவருக்கும் கடந்த 3ஆம் தேதி பெங்களூருவில் திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பலமுறை கூறியும் உறவினர்களும், சிறுமியின் தாயாரும் ஏற்கவில்லை. இந்த நிலையில், யாருமில்லாத நேரம் பார்த்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து சிறுமியை கண்டுபிடித்து உறவினர்கள் வலுக்கட்டாயமாக சிறுமியை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறுமியின் பாட்டி அளித்த புகார் அடிப்படையில், வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். குழந்தை திருமணத்தை நடத்தி வைத்த பெண்ணின் தாயார் நாகம்மா, கணவர் மாதேஷ், மாதேசின் அண்ணன் மல்லேஷ் ஆகியோரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.