16 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையில் போலீசாருடன் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந் மாவட்டத்தில் உள்ள மெயின்பூர் காட்டில் போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது 2 பெண் நக்சல்கள் உட்பட  16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நக்சலும் இறந்ததாகவும், இன்னும் இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day