19 கிலோ சமையல் எரிவாயு விலை ரூ.30.50 குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைக்‍கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டருக்‍கான புதிய விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிக்கின்றன. 
அதன்படி, இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதம் ஆயிரத்து 960 ரூபாய் ஆக இருந்த வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சமையல் ​எரிவாயு சிலிண்டரின் விலை, 30 ரூபாய் 50 காசுகள் குறைக்‍கப்பட்டு, ஆயிரத்து 950 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகளுக்‍கு விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day