எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா விளங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - குவைத் இடையே நட்புறவை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடியை, குவைத் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கைகுலுக்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து ராணுவ அணிவகுப்புடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் குவைத் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய பாரம்பரிய கலைகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை கண்டு ரசித்த பிரதமர் மோடி, பின்னர் கலைக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு, கைகளில் தேசிய கொடியுடன் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். அவர்கள் கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தும், கைகுலுக்கியும் பிரதமர் மோடி பேசினார்.
அங்கிருந்த 101 வயது முதியவரை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்தவர்களுடன் உரையாற்றிய மோடி, அவர்களின் புத்தகங்களிலும் கையெழுத்திட்டார்.