2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் யாத்திரை' நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிப். 28ல் தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் நடக்கும் குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் அன்றைய தினம் திறந்து வைக்க உள்ளார்.

Night
Day