2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

சவுதிஅரேபிய பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி 3வது முறையாக இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா, சவுதி அரேபியா நாடுகளிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது, முதலீடுகளை ஊக்குவிப்பது, இருதரப்பு தொழில், வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, எரிசக்தி விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருதரப்பு சந்திப்பு மட்டும் இன்றி, பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்கு முன்பாக கடந்த 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருந்தார்.

Night
Day