2 நாள் பயணமாக மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் தரம் கோகூலை சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.  

2 நாள் பயணமாக மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டுப் பிரதமர் நவீன் ராமகூலம், எதிர்க்கட்சித் தலைவர், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் என 200க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். 

தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மொரீசியஸ் வாழ் இந்தியர்கள் அளித்த வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து மொரீஸியஸில் உள்ள பிரபல தாவரவியல் பூங்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் நவீன் ராமகூலத்துடன் இணைந்து என் தாயின் பெயரின் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.

இதையடுத்து போர்ட் லூயிஸ் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, மொரீஸியஸ் அதிபர் தரம் கோகுலை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

நாளை மொரீஸியஸில் நடைபெறும் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.


Night
Day