இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
2022-23 ஆண்டில் 6 தேசிய கட்சிகளின் ஒட்டு மொத்த வருவாய் 3 ஆயிரத்து 77 கோடி ரூபாய் என்றும் அதில் ஆளும் பாஜக மட்டும் 2 ஆயிரத்து 361 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 452 கோடி ரூபாய் வருவாயுடன் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் கூறியுள்ளது. பாஜகவின் வருவாய் கடந்த ஆண்டை விட 23 புள்ளி 15 சதவிகிதம் அதிகம் என்றும் மொத்த வருவாயில் அக்கட்சி 57 புள்ளி 68 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 452 கோடி வருவாய் ஈட்டிய காங்கிரஸ், 467 கோடி ரூபாய்க்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...