2023-24 ஆம் நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்ட ரயில்வே ரூ.2.6 லட்சம் கோடி வருவாய் : ரயில்வே அமைச்சர் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2023-24 ஆம் நிதியாண்டில் இந்திய ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் சரக்குகளை கையாளுதல் மற்றும் பயணிகள் கட்டணம் மூலம் ரயில்வேக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்நிலையில் 2023-24ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 5 சதவீதம் அதிகம் என கூறிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதுதான் ரயில்வேயின் உச்சபச்ச வருவாய் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரத்து 591 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றுமதி செய்தும் இந்தியன் ரயில்வே சாதனை படைத்துள்ளது. 

Night
Day