2047ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டும் - திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அரசியலமைப்பு மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்‍கான இலக்‍குகளை நாம் அடைந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

75வது ஆண்டு அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு உரையாற்றினார்..அப்போது,அனைத்து குடிமக்‍களும் அரசியலமைப்பு லட்சியங்களை உள்வாங்கி, அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். மேலும் வருகிற 2047ஆம் ஆண்டுக்‍குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்‍கை அடைய அனைவரும் ஒன்றிணைய என்று வலியுறுத்தினார். பெண்கள் இடஒதுக்‍கீடு தொடர்பான சட்டத்தின் மூலம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்‍கு அதிகாரமளிக்‍கும் புதிய சகாப்தத்தை தொடங்கி இருப்பதாக குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம் தெரிவித்தார்.

Night
Day