22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவலர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் கூட்டுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கான்கர் மாவட்டத்தில், சோட்டேபெத்தியாவின் கோரோஸ்கோடோ கிராமத்திற்கு அருகே நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையினரின் எண்கவுன்டரில் நான்கு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 

இதனிடையே,  நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். இதில் யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை எனக் கூறியுள்ள போலீசார், தாக்குதலுக்கு காரணமான நக்சலைட்டுகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Night
Day