24 பேய் கிராமங்களில் ஒரு வாக்கு சாவடி கூட அமைக்கப்படாத விநோதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்டில் பேய் கிராமங்கள் என மக்களால் அழைக்கப்படும் 24 கிராமங்களில் தேர்தல் இல்லை என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரகாண்டில் வருகிற 19ம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதனால் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் குறிப்பிட்ட 24 கிராமங்களில் மட்டும் தேர்தலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும் தேர்தல் ஆணையமும் ஒரு வாக்கு சாவடியைக்கூட அமைக்கவில்லை. ஏனெனில் இங்கு இருந்த மக்கள் சுதந்திரத்திற்கு பிறகு புலம்பெயந்ததால் இந்த கிராமங்களை மக்கள் வசிக்காத கிராமங்கள் என மாநில இடம்பெயர்வு ஆணையம் அறிவித்துள்ளது. 

Night
Day