250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானில் 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

தவுசா மாவட்டம் காளிகாட் கிராமத்தில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற 5 வயது சிறுவன், அங்கு திறந்து கிடந்த 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பதறி போன பெற்றோர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். நேற்றிரவு முதல் சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 150 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜே.சி.பி மூலம் குழி தோண்டி மீட்பு பணி நடந்து வருகிறது. 

Night
Day