எழுத்தின் அளவு: அ+ அ- அ
மூன்று ஆப்ரிக்க நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.
முதலில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் போலா அகமது டினுபு உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் நைஜீரியானாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் பிரேசில் சென்று, அங்கு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்ச வார்த்தையில் ஈடுபட்டு, முக்கிய ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதித்தார்.
அங்கிருந்து கயனா சென்ற பிரதமர், அங்கு நடைபெற்ற இந்தியா-காரிகோம் மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் கிரிக்கெட் ஆகியவை இந்தியாவையும் கயானாவையும் ஆழமாக இணைப்பதாகவும், திறன் கட்டமைப்பு, விவசாயம், பருவநிலை மாறுபாடு, புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் வா்த்தகம், பெருங்கடல் பொருளாதாரம், மருத்துவம் ஆகியவற்றின்கீழ் 7 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்து, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
பின்னர் அம்மாநாட்டில் கயானாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார்.