3 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட பெய்லி பாலம் - போர்க்கால அடிப்படையில் ராணுவம் மீட்புப் பணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிக்காக ராணுவம் கட்டிய 190 அடி நீளமுள்ள பெய்லி பாலம் பயன்பாட்டிற்கு வந்தது. ஜேசிபி மற்றும் பிற அதிநவீன இயந்திரங்கள் மூலம் 3 நாட்களுக்குள் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 24 டன் எடை கொண்ட பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று மாலை நிறைவடைந்ததையடுத்து 350 பேர் கொண்ட ராணுவக் குழு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் இறங்கியுள்ளதாக பாரா ரெஜிமென்ட் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் அர்ஜுன் சேகன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதிக்குச் செல்ல முடியாத சூழல் நிலவிய நிலையில், தற்போது மீட்புப் பணிகளை விரைவுபடுத்த பெய்லி பாலம் பேருதவியாக மாறியுள்ளது. 90 டன் எடையைத் தாங்கக்கூடிய இந்தப் பாலம், கடினமான நிலப்பரப்பிலும், சவாலான வானிலையிலும் பயன்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day