இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடல் நலக் குறைவு காரணமாக 3 நாட்களாக அவர் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அமராவதி மற்றும் சோலாபூர் தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...