3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜவகர்லால் நேருவுக்‍கு பின்னர் தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கும் அமைச்சர்களுக்‍கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி ​நடத்தி வந்த பாஜகவுக்‍கு இம்முறை நடைபெற்ற மக்‍களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது. இதனால் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பாஜக தலைமையிலான ​தேசிய ஜனநாயகக்‍ கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழா 
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 7.15 மணியளவில் நடைபெற்றது. இதில் நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக்‍ ​கொண்டனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் ​எடுத்துக்‍ கொண்டனர். இதனை தொடர்ந்து மனோகர் லால் கட்டார் பதவியேற்றார். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரான ஹெச்.டி குமா​ரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன்ராம் மாஞ்சி, ஐக்‍கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் சர்பானந்த சோனேவால், வீரேந்திர குமார், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரும் பதவிப்பிரமாணம் எடுத்துக்‍ கொண்டனர்.

கேபினட் அமைச்சர்கள் 30 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 5 பேர், இணையமைச்சர்கள் 37 ​பேர் பதவியேற்றனர்.  பதவியேற்பு விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ,சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்கள், முக்‍கியபிரமுகர்கள், 7 வெளிநாடுகளின் தலைவர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.





Night
Day