33 மாவட்டங்களில் இன்று துவங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்களில் உள்ள ஒரு கோடியே 17 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய சாதி வாரி கணக்கெடுப்பு இன்று துவங்குகிறது.

இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது தெலங்கானா மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் புரட்சிகரமான தருணம் என்று கூறியுள்ளார். 80 ஆயிரம் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று இந்த கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நீதியை நிலைநாட்டுவதில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார். தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்களில் உள்ள ஒரு கோடியே 17 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கி அடுத்த சில வாரங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Night
Day