360 கிராமங்களுக்கு ஜுன் மாதத்திற்குள் 4ஜி இணைய சேவை - அமித் ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 360 கிராமங்களுக்கு வரும் ஜுன் மாதத்திற்குள் 4ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  


குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட எல்லைப்புற கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், பெண் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் அமித் ஷா உரையாடினார். அப்போது பேசிய அவர், எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 360 கிராமங்களுக்கு ஜுன் மாதத்திற்குள் 4 ஜி இணைய சேவை வழங்கப்படும் என்றார். எல்லைகளில் உள்ள 662 கிராமங்களில் 474 கிராமங்கள் கம்பி வடம் மூலமும் 127 கிராமங்கள் கம்பி இணைப்பற்ற மின் இணைப்பும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


Night
Day