370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் காஷ்மீரில் இந்திய கொடி பறக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், அங்கு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுவது தடுக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை 370-வது பிரிவுடன் ஒப்பிட்டு, தேசிய மாநாட்டுக் கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரவிசங்கர் பிரசாத், 370-வது சட்டப்பிரிவு இருந்தவரை முஸ்லிம் பெண்கள் வேறு மாநில முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்தால் தந்தையின் சொத்தில் உரிமை கிடையாது எனவும், தால் ஏரி மீனவர்களுக்கு, ஓ.பி.சி அந்தஸ்து கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகுதான் ஜம்மு-காஷ்மீரில் இந்திய கொடி பறப்பதாகவும், மக்களின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day