40 வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதலின் 6ம் ஆண்டு நினைவு தினம் - பிரதமர் மோடி, அமித் ஷா நினைவஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புல்வாமான தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். 

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துவதாக கூறியுள்ளார். வீரர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பையும் வருங்கால தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

Night
Day