5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரிசர்வ் வங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது.
 
ரெப்பொ வட்டி விகிதம் என்பது நிதி பற்றாக்குறை ஏற்படும்போது மத்திய வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் நிதிக்கான வட்டி விகிதம் ஆகும். இந்நிலையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதாவது கால் சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துளளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

varient
Night
Day