5 மாதங்களுக்குப் பிறகு கவிதாவுக்கு ஜாமீன்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவருமான கவிதாவுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி  மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் கவிதா தனக்கு ஜாமின் வழங்ககோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது என்றும் கவிதா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சாட்சியங்களை கலைக்க கூடாது எனவும் நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

varient
Night
Day