51,000 பேருக்கு மத்திய அரசு வேலைக்கான நியமன கடிதங்கள் வழங்கிய பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

51 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான நியமன கடிதங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்கினார். 

டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசின் கொள்கைகள், வேலைவாய்ப்பு உருவாக்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார். பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகின்றன எனக்கூறிய பிரதமர் மோடி, ஹரியானாவில் புதிய அரசு அமைந்ததும் 26 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

Night
Day