6ம் வகுப்பு மாணவர்களை பெல்ட்டால் கண்மூடித்தனமாக அடித்த 10ம் வகுப்பு மாணவன் - கைது செய்த போலீசார் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலத்தில் அரசு பிற்படுத்தப்பட்டடோர் மாணவர் விடுதியில் 10ம் வகுப்பு மாணவன் ஒருவன், 6ம் வகுப்பு மாணவர்களை பெல்ட்-டால் கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்னூல் மாவட்டம்   கொண்டமூருவில் உள்ள அந்த விடுதியில் தங்கி படித்துவரும் 10ம் வகுப்பு மாணவன் மகேஷ், அதே விடுதியில் தங்கி பயின்று வரும் 6ம் வகுப்பு மாணவர்களை, தான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா எனக்கூறி பெல்டால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தான் சொல்வதைக் கேட்காவிட்டால் மற்றவர்களுக்கும் இதே நிலைதான் என்று அந்த மாணவன் மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானது. இதையடுத்து மாணவன் மகேஷை கைது செய்த போலீசார் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து விடுதி வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

Night
Day