6 முறை எம்.பி.யாக இருந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு சீட் வழங்காத பாஜக

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

6 முறை எம்.பி.யாக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு  இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பளிக்க மறுத்துள்ளது. அரசியல் சாசனம் பற்றிய அவரது கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வென்றால், அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவோம் என் பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்தான் அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முறை 37 சிட்டிங் எம்.பி.க்களுக்கு பாஜக சீட் வழங்கவில்லை. இதில் அதிகபட்சமாக 9 பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

Night
Day