6-வது கட்டத் தேர்தல்-58 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

6-வது கட்ட மக்‍களவை தேர்தலில் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்‍குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இதுவரை 428 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து 6-வது கட்ட தேர்தல் இன்று 58 தொகுதிகளில் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகள், டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 4, ஜம்மு காஷ்மீரில் 1 என மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இன்றைய தேர்தலில் மத்திய அமைச்சர்​ தர்மேந்திர பிரதான், ​பன்சூரி ஸ்வராஜ், கண்ணையாகுமார், மேனகா காந்தி, மெகபூபா முஃப்தி, மனோகர் லால் கட்டார், நவீன் ஜிண்டால், ராஜ்பப்பர், தீபேந்தர் சிங் ​ஹுடா, ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். 

இந்த தேர்தலில் 11 கோடியே 13 லட்சம் வாக்‍காளர்களுக்‍காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்‍குச்சாவடிகள் அமைக்‍கப்பட்டுள்ளன. அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய வாக்குச்சாவடிகளில் மாநில போலீசாருடன் துணை நிலை ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

தொடர்ந்து 7-வது மற்றும் இறுதிக் கட்டமாக 57 தொகுகளுக்கு வரும் ஜுன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் ஜுன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்‍கப்பட உள்ளன. 

Night
Day