6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மே மாத வாக்கில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்னதாக தமது இல்லத்தில் இருந்து புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அல்வாவை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்தினார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சரியாக 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2047ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

சாமானிய மக்களின் சராசரி வருமானம் 50 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், வரி சீர்திருத்தங்கள் மூலம் வரி வருவாய் விரிவாக்கம் அடைந்ததாக தெரிவித்தார்.

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா நாடுகளுடனான முலோபாய உறவு, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பிரதமர் மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தால் நாட்டில் 11.8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Night
Day