70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எழுபது வயத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.  

ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. அதில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.

varient
Night
Day