எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாஜக அரசு 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ரோஜ்கர் மேளா-க்கள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் திறனை வெளிப்படுத்துவதாக கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பாஜக அரசு 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை படைத்துள்ளது என்றும், கடந்த கால ஆட்சிகளில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் பிரதமர் மோடி தமது உரையில் தெரிவித்தார். நாடு முழுவதும் 45 இடங்களில் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.