எழுத்தின் அளவு: அ+ அ- அ
13 மாநிலங்களில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகிளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 2ம் கட்ட வாக்குப்பதிவில் கேரளா, கர்நாடாகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவின் 11 மணி நிலவரப்படி, அசாமில் 27 சதவீதமும், பீகாரில் 21 சதவீதமும், சத்தீஸ்கரில் 35 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 26 சதவீதமும், கேரளாவில் 25 சதவிதமும் பதிவாளியுள்ளது. மேலும் மத்தியபிரதேசத்தில் 28 சதவீதமும், மகாராஷ்டிராவில் 18 சதவீதமும், மணிப்பூரில் 33 சதவீதமும், ராஜஸ்தானில் 26 சதவீதமும், திரிபுராவில் 36 சதவீதமும், உத்தரபிரதேசத்தில 24 சதவீதமும், மேற்குவங்கத்தில் 31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் தற்போது வரை 26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.