96 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

10 மாநிலங்களை உள்ளடக்கிய 96 மக்களவைத் தொகுதிகளில் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதன்ஒரு பகுதியாக  இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 96 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 17 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளிலும், மேற்கு வங்கம், மத்தியபிரதேசத்தில் தலா 8 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், ஜார்கண்ட், ஒடிசாவில் தலா 4 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.  இதேபோல், யூனியன் பிரதேசமான ஜம்முகாஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும், 147 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநிலத்தில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Night
Day