AI தொழில்நுட்பத்தில் இரட்டிப்பு வளர்ச்சி- மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா இரட்டிப்பு முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் உலக உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும் என தரமதிப்பீடு நிறுவனங்கள் கணித்துள்ளதாக தெரிவித்தார். 3வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று 125 நாட்களில், 9 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 8 புதிய விமான நிலைய பணிகளை தொடங்கியுள்ளதாகவும், விவசாயிகளின் வங்கி கணக்கில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 15 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், அந்நிய செலவாணி 700 பில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கை ஒளியாக உள்ளதாக கூறினார். 

Night
Day