ED-யின் சம்மன்களை புறக்கணித்ததால்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் : அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத் துறையின் 9 சம்மன்களையும் புறக்கணித்ததாலேயே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சா்மா கூறியுள்ளார். கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத் துறையின் சம்மன்களை ஒருவா் வேண்டுமென்றே புறக்கணிக்கிறாா் என்றால், கைதுக்கு அவா் தயாராக இருக்கிறாா் என்றுதான் அா்த்தம் என்றார். இந்த வழக்கைப் பொறுத்தவரை கெஜ்ரிவால்தான் அமலாக்கத் துறையை வரவழைத்து கைதாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கு முன்பு ராகுல், சோனியா போன்ற அரசியல் தலைவா்கள் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியபோது அதை ஏற்று விசாரணைக்கு ஆஜராகியிருப்பதாகவும் அதற்கு மாறாக கெஜ்ரிவாலின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Night
Day