HMPV வைரஸ் பாதிப்பு 7ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. HMPV என அழைக்கப்படும் இந்த வைரசால் சீனாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த HMPV வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே குஜராத்தில் ஒருவரும், கர்காடகா மற்றும் தமிழகத்தில் தலா இருவரும் HMPV தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் 2 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதிலும் HMPV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சீரான உடல்நலத்துடன் இருந்தாலும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நெரிசல் மிகுந்த இடங்களில் பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டும் என்றும், சுவாசக்கோளாறு இருந்தால் உடனடியாக சுகாதார நிலையத்தை நாட வேண்டும் என்றும் சுகாதரத்துறை சார்பாக அறிவித்தப்பட்டுள்ளது.

Night
Day