INSAT- 3DS செயற்கைக்கோளுடன் நாளை மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது GSLV - F14 ராக்கெட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வானிலையை ஆராய்ச்சி செய்வதற்காக INSAT- 3DS செயற்கைக்கோளுடன் GSLV - F 14  ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. 2 ஆயிரத்து 274 கிலோ எடை கொண்ட INSAT- 3DS செயற்கைக்கோள், பூமியிலிருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி தாழ்மண்டல சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கடற் பரப்பில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள், வளிமண்டலத்தில் ஏற்படும் அழுத்த வேறுபாடுகள் மற்றும் கடலில் மீனவர்களை கண்டுபிடிக்கவும் இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது, சென்னை மற்றும் தூத்துக்குடியில், எதிர்பாராத விதமாக அதி கனமழை பெய்து பாதிக்கப்பட்டபோது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சரியான தரவுகள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்த நிலையில், தற்போது, வானிலையை துல்லியமாக கணிப்பதற்காக இந்த INSAT- 3DS செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. நாளை மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இதற்கான கவுண்டவுன் தொடங்கியது.

Night
Day