VIP சலுகைகளை கைவிடுவதாக முதலமைச்சர் பஜன்லால் சர்மா அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முக்கியப் பிரமுகர்களுக்கான சலுகைகளை கைவிடுவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா அறிவித்துள்ளார். இதுபோன்ற சலுகைகளால் போக்குவரத்தின் போது சாமானிய மக்களும் நோயாளிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி முதலமைச்சர் பஜன்லால் சர்மாவும் சாலைகளின் சிவப்பு சிக்னல்களில் நிறுத்தப்படுவார் என டிஜிபி சாஹு கூறியுள்ளார். அதேநேரத்தில் முதலமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் முக்கியப் பிரமுகர்களுக்கான சலுகை நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day